ஆழ்வார்குறிச்சி விநாயகர் கோவிலில் வருஷாபிஷேகம்
ADDED :1664 days ago
ஆழ்வார்குறிச்சி: ஆழ்வார்குறிச்சி வரம்தரும் விநாயகர் கோயிலில் வருஷாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது. ஆழ்வார்குறிச்சியில் தெப்பகுளம் அருகே துதிக்கை உடைந்த நிலையில் வரம்தரும் விநாயகர் கோயில் உள்ளது. இக்கோயிலில் 2015ம் ஆண்டு மாக கும்பாபிஷேகம் நடந்தது. அதனை தொடர்ந்து 6ம் ஆண்டாக வருஷாபிஷேக நாளன்று காலையில் பணிநிறைவு சப்-இன்ஸ்பெக்டர் செல்லப்பாண்டியன் முன்னிலையில் கணபதி ஹோமம், கும்பஜெபம், வேதபாராயணம், மகாபூர்ணாகுதி சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, விமானஅபிஷேகம் நடந்தது. மாலையில் விளக்குபூஜை, புஷ்பாஞ்சலியும், விநாயகருக்கு வெள்ளி அங்கி சாத்தப்பட்டு தீபாராதனையும் நடந்தது.