கோவில் திருவிழா தர்மகர்த்தா மீது வழக்கு
ADDED :1666 days ago
மப்பேடு : திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்துார் ஒன்றியம், மப்பேடு அடுத்த, திருமணிக்குப்பம் கிராமத்தில், கங்கையம்மன் கோவிலில், கடந்த 24ம் தேதி, திருவிழா நடந்தது.
இதில், எவ்வித அரசு அனுமதி பெறாமல் கொரோனா ஊரடங்கு காலத்தில் கோவில் திருவிழாவும், சுவாமி ஊர்வலமும் நடந்தது.இதில், இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இது குறித்து, வி.ஏ.ஓ., குணாலன் அளித்த புகாரையடுத்து, மப்பேடு போலீசார் கங்கையம்மன் கோவில் தர்மகர்த்தாவான கங்கன் என்பவர் மீது, அனுமதியின்றி கொரோனா தொற்று காலத்தில், அரசு அறிவித்த நெறிமுறைகளை பின்பற்றவில்லை என, வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.