கீழப்பாவூர் நரசிம்மர் பீடத்தில் சிறப்பு ஆராதனை
ADDED :1605 days ago
பாவூர்சத்திரம்: கீழப்பாவூர் நரசிம்மர் பீடத்தில் கொரோனா குறைந்திட வேண்டி பவுர்ணமி நாளன்று நரசிம்மருக்கு சிறப்பு ஆராதனை நடத்தப்பட்டது. பாவூர்சத்திரம் அருகே உள்ள கீழப்பாவூர் வடக்கு பஸ்ஸ்டாண்ட் அருகில் அமைந்துள்ள ஸ்ரீ ஸாம்ராஜ்யலட்சுமி நரசிம்மர் பீடத்தில் நடந்த ஆராதனையில் கொரோனா பாதிப்பிலிருந்து மக்கள் விடுபடவும் பாதிப்பில்லாத இந்தியா உருவாக வேண்டி நரசிம்மருக்கு சிறப்பு ஆராதனை நடந்தது. ஊரடங்கு காரணமாக ஆராதனையில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.