கரிவரதராஜ பெருமாள் கோவிலில் திருவோண வழிபாடு
ADDED :1666 days ago
நெகமம்: காட்டம்பட்டிபுதுார் ஸ்ரீதேவி, பூதேவி சமேத கரிவரதராஜ பெருமாள் கோவிலில், நேற்று திருவோண சிறப்பு பூஜை நடந்தது.நெகமம், காட்டம்பட்டிபுதுாரில், மிகப்பழமையான ஸ்ரீதேவி, பூதேவி சமேத கரிவரதராஜ பெருமாள் கோவில் அமைந்துள்ளது. கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளால், கோவிலில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், நேற்று காலை, 10:00 மணி முதல், 11:45 மணி வரையில், திருவோணத்தை முன்னிட்டு, 16 வகையான திருமஞ்சனங்கள் சார்த்தப்பட்டு, வழிபாடு நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் பெருமாள் அருள்பாலித்தார்.