கோதண்டராமர் கோயிலில் சங்கடஹர சதுர்த்தி
ADDED :1840 days ago
செம்பட்டி : சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு செம்பட்டி கோதண்டராமர் கோயிலில் சிறப்பு பூஜை நடந்தது.சுவாமிக்கு திரவிய அபிஷேகத்துடன் சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டது. அஷ்டோத்திர பூஜையுடன், மகா தீபாராதனை நடந்தது. இதே போல், சின்னாளபட்டி சதுர்முக முருகன் கோயில், கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயிலில், சங்கடஹர சதுர்த்தி சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது.