உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாமல்லை சிற்பங்கள் திறப்பு: சொற்ப பயணியர் மட்டுமே ரசிப்பு

மாமல்லை சிற்பங்கள் திறப்பு: சொற்ப பயணியர் மட்டுமே ரசிப்பு

மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில், நேற்று திறக்கப்பட்ட, தொல்லியல் சின்னங்களை, சொற்ப பயணியரே கண்டுகளித்தனர். செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில், பல்லவர் கால கலைச்சிற்பங்களை, உள், வெளிநாட்டுப் பயணியர் கண்டு ரசிக்கின்றனர்.


கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு ஊரடங்கால், கடற்கரை கோவில், அர்ச்சுனன் தபசு உள்ளிட்ட சிற்ப வளாகங்கள், ஏப்ரல் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தொல்லியல் சிற்ப வளாகங்கள், ஏப்., 16 முதல் மூடப்பட்டன. தற்போது தமிழக அரசு, சுற்றுலாவை அனுமதித்து, நேற்று மீண்டும் திறக்கப்பட்டன. இதையடுத்து, சிற்பங்களை பராமரிக்கும் தொல்லியல் துறையினர், சுற்றுலா வந்த பயணியரிடம், நுழைவுக்கட்டணத்தை, பணமாக பெறாமல், மொபைல் போனில், இணையவழி பரிமாற்றம் மூலமே பெற்றனர். முக கவசம், உடல் வெப்ப பரிசோதனைக்கு பின், சிற்ப வளாகத்திற்குள், பயணியரை அனுமதித்தனர். பேரூராட்சி ஊழியர்கள், சிற்ப வளாகங்களை துாய்மைப்படுத்தி, கிருமிநாசினி தெளித்தனர். சொற்ப அளவிலான பயணியரே வந்து, சிற்பங்களை கண்டு களித்தனர். வார இறுதி விடுமுறை நாட்களில், பயணியர் குவிவர் என, எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !