உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பொய்யாமொழி விநாயகர் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்

பொய்யாமொழி விநாயகர் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்

 திண்டிவனம்: திண்டிவனம் அடுத்த தீவனுார் பொய்யாமொழி விநாயகர் கோவிலில், ஊஞ்சல் உற்சவம் நடந்தது.சங்கடஹர சதுர்த்தியையொட்டி நேற்று முன்தினம் காலை விநாயகருக்கு பால், தயிர், இளநீர், விபூதி, சந்தனம், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிேஷகம் நடந்தது. தொடர்ந்து மாலை 5:00 மணியளவில் கணபதி ேஹாமமும், 6:00 மணிக்கு 108 சங்காபிேஷகமும், இரவு 7:00 மணியளவில் ஊஞ்சல் உற்வசமும் நடந்தது.விழாவிற்கான ஏற்பாடுகளை, பரம்பரை அறங்காவலர் சகுந்தலா, மணிகண்டன் ஆகியோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !