நெல்லைடவுன் விநாயகர் கோயிலில் வருஷாபிஷேகம்
ADDED :1569 days ago
திருநெல்வேலி: நெல்லைடவுன், கோடீஸ்வரன் நகர் விநாயகர் கோயிலில் வருஷாபிஷேகம் நடந்தது. இதனைமுன்னிட்டு நேற்று காலை கணபதி ஹோமம், சகஸ்ரநாம அர்ச்சனை, விமானம் , விநாயகருக்கு அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்கார தீபாராதனை நடந்தது. வருஷாபி ஷேக பூஜையை ராஜேஷ்பட்டர் நடத்தினார். இதில் புரவலர் கோடீஸ்வரன்மணி, மகேஷ்வரி மணி, கமிட்டி தலைவர் மீனாராம் பாலாஜி, முத்துராஜ், முன்னாள் பஞ்., துணைதலைவர் முருகானந்தம், கோடீஸ்வரன், பாண்டியராஜன், செல்வபிரியா முருகன், சிவசைலநாதன், சங்கர், சேது, சூரியன், சீனிவாசன் மற்றும் பக்தர் பேரவையினர் உட்படபலர் பங்கேற்றனர்.