உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / 62 கோவில்களின் நிலை உயர்த்தி உத்தரவு

62 கோவில்களின் நிலை உயர்த்தி உத்தரவு

சென்னை: புறநகரில் ஆண்டு வருமானம் அதிகரித்துள்ள 62 கோவில்களின் நிலை உயர்த்தி, அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது.ஹிந்து சமய அறநிலையத்துறை சட்டம் பிரிவின் கீழ், சென்னை இணைக் கமிஷனர் மண்டலம் 1, 2 ல் உள்ள 62 கோவில்களின் உதவித் தொகை நிர்ணய வருமானம், ஆண்டுக்கு 10 லட்சம் ரூபாய்க்கு அதிகமாக உள்ளது.அவற்றை அறநிலையத்துறை கமிஷனருக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தின்படி நிலை உயர்வு செய்து, சட்டப்பிரிவு 46 - 3ன் கீழ் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.அதன்படி, திருவொற்றியூர் தட்சிணாமூர்த்தி கோவில், அண்ணாசாலை பச்சையம்மன் கோவில், செம்மஞ்சேரி ஸ்ரீநிவாச பெருமாள் கோவில், சைதாப்பேட்டை கடும்பாடி சின்னம்மன் கோவில், வேளச்சேரி தண்டீஸ்வரர், யோகநரசிம்மர் கோவில் உள்ளிட்ட 62 கோவில்கள் நிலை உயர்த்தப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !