உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவில் சொத்துக்கள் மீட்கப்படுமா; பக்தர்கள் எதிர்பார்ப்பு

கோவில் சொத்துக்கள் மீட்கப்படுமா; பக்தர்கள் எதிர்பார்ப்பு

 திட்டக்குடி: திட்டக்குடி வைத்தியநாதசுவாமி, அரங்கநாத பெருமாள், தொழுதூர் மதுராந்த சோளீஸ்வரர் கோவில் சொத்துக்களை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்டு ஏலம் விட நடவடிக்கை எடுக்க வேண்டும் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.திட்டக்குடி வைத்தியநாதசுவாமி மற்றும் அரங்கநாதபெருமாள், தொழுதூர் மதுராந்த சோளீஸ்வரர் கோவில் சொத்துக்கள் முறையான பராமரிப்பின்றி ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் உள்ளது. பலஆண்டுகளுக்கு முன் விடப்பட்ட ஏலத்தின் அடிப்படையில் பலர் குத்தகையை முறையாக செலுத்தாமல் ஆக்கிரமித்துள்ளனர். மேலும் இக்கோவில்களுக்கு சொந்தமான திருக்குளங்கள் முறையான பராமரிப்பின்றி ஆக்கிரமிப்பில் உள்ளது. இதை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து பக்தர்கள் கூறியதாவது, தரை வாடகைக்கு விடப்பட்ட இடங்களில் மெத்தை கட்டடங்களும், அடுக்குமாடி குடியிருப்புகளும் கட்டி விதிகளை மீறி உள்வாடகைக்கு விட்டு பலர் சம்பாதிக்கின்றனர். இதையெல்லாம் தடுக்க வேண்டிய இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகள் அவர்களுக்கு உடந்தையாக உள்ளனர் என தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !