பெருமாள் கோவில்களில் மூன்று முறை தீர்த்தம் ஏன்?
ADDED :1601 days ago
முதல் முறை தீர்த்தம் பெறுவது ப்ரதமம் கார்ய சித்யர்த்தம் என்றபடி நம் செயல்களில் வெற்றி பெற (ஜ்ஞானத்தை வேண்டி) ஸங்கல்பம் செய்துகொள்வது. இரண்டாம் முறை தீர்த்தம் பெறுவது த்விதீயம் தர்மஸ்தாபனம் என்றபடி, நாம் நெறியைக் கடைப்பிடிக்க ஸங்கல்பம் செய்துகொள்வது. மூன்றாம் முறை தீர்த்தம் பெறுவது த்ரிதீயம் மோக்ஷ ப்ரோக்தம் குணார்னவம் என்றபடி, மெய்ப்பொருளான பகவானை உணர ஸங்கல்பம் செய்ய வேண்டும்.