கிராமக் கோயில்களுக்கு இலவச மின்சாரம்
ADDED :1659 days ago
திண்டுக்கல் : கிராமக் கோயில்களுக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என, திண்டுக்கல் கிராமக் கோவில் பூஜாரிகள் பேரவையினர் வலியுறுத்தியுள்ளனர். மாவட்ட அமைப்பாளர் பழனிச்சாமி தெரிவித்தது: நான்கு மாதமாக நிலுவையில் உள்ள ஓய்வூதியத்தை வழங் வேண்டும். அனைத்து பூஜாரிகளுக்கும் மாத ஊக்க தொகை, கோவில்களுக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டும். அறங்காவலர் குழுவில் அர்ச்சகர், பட்டாச்சாரியார், பூஜாரிகளையும் இணைக்க வேண்டும். பூஜாரிகளுக்கும் கொரோனா உதவித்தொகை, இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும். நலவாரியத்தை மேம்படுத்த வேண்டும், என்றார்.