உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோயில்களை திறப்பது எப்போது? பக்தர்கள் வேண்டுகோள்

கோயில்களை திறப்பது எப்போது? பக்தர்கள் வேண்டுகோள்

காரைக்குடி: கொரோனா ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பக்தர்களின் வழிபாட்டிற்கு மீண்டும் கோயில்களை திறந்து விட வேண்டும் என கோரிக்கை எழுந்து வருகிறது.

கொரோனா பரவலைத் தடுக்க முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஊரடங்கு காரணமாக காய்கறி மற்றும் மளிகை கடைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு தளர்வு காரணமாக. வணிக வளாகங்கள் உட்பட பல்வேறு கடைகளும் திறக்கப்பட்டுள்ளன. தவிர, மதுக்கடைகளும் திறக்கப்பட்டுள்ளன. ஆனால் கடந்த 60 நாட்களுக்கும் மேலாக தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் பக்தர்கள் உள்ளே சென்று வழிபாடு செய்ய அரசு தடை விதித்துள்ளது இதனால், பக்தர்கள் கோயிலின் வெளியில் நின்றபடி தரிசனம் செய்து வருகின்றனர். எனவே, கோயில்களுக்குள் பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !