கள்ளக்குறிச்சி கால பைரவருக்கு அஷ்டமி சிறப்பு பூஜை
ADDED :1718 days ago
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் கால பைரவர் சுவாமிக்கு தேய் பிறை அஷ்டமி சிறப்பு பூஜை நடந்தது. பைரவருக்குப் பவுர்ணமிக்கு பின் வரும் தேய்பிறை அஷ்டமியில் பஞ்சதீபம் ஏற்றி வழிபட்டால் தீர்க்க முடியாத தொல்லைகள் நீங்கும் என்பது ஐதீகம். அதன்படி கள்ளக்குறிச்சி சிவகாம சுந்தரி சமேத சிதம்பரேஸ்வரர் கோவிலில் ஈசான்ய மூலை எனப்படும் வடகிழக்கு திசையில் நீலமேனியராய், நாய் வாகனத்துடன் எழுந்தருளியுள்ள கால பைரவர் சுவாமிக்கு தேய் பிறை அஷ்டமி தினமான நேற்று சிறப்பு பூஜைகள் நடந்தது.மாலையில் கால பைரவருக்கு அபிஷேக, ஆராதனை நடத்தி, மந்திர ஜெபம் வாசித்து பூஜைகள், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. கொரோனா தடைக்காலம் என்பதால் பக்தர்கள் இன்றி வழிபாடு நடந்தது.