பக்தர்களின் வருகைக்காக தயாராகும் திண்டுக்கல் கோயில்கள்
ADDED :1598 days ago
திண்டுக்கல் : திண்டுக்கல்லில் அறநிலையத்துறை கோவில்களை சுத்தம் செய்யும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.கொரோனா பரவல் ஊரடங்கில் நாளை பல்வேறு தளர்வுகள் அமல்படுத்தப்பட உள்ளது.
நாளை முதல் ஒரு வாரத்திற்கு அரசு கூடுதல் தளர்வுகளை அளித்துள்ளது. அதில் வழிபாட்டுத்தலங்களை வழிபாட்டு நெறிமுறைகளை பின்பற்றி திறக்கலாம் என அறிவித்துள்ளனர்.திண்டுக்கல்லில் காளாத்தீஸ்வரர் கோயிலை சுத்தம் செய்யும் பணிகள் நடக்கிறது. கோயில் சீலிங் முதல் தூண்கள் மற்றும் தரைகள் வரை அனைத்து பகுதி களிலும் கிருமிநாசினி தெளித்தனர். பக்தர்கள் சமூக இடைவெளியுடன் நின்று சாமி தரிசனம் செய்ய பெயின்டால் வட்டங்கள் வரைந்தனர்.மேலும் முகக்கவசம், சமூகஇடைவெளி, சானிடைசர் பயன்பாடு, கைகளை கழுவுதல் குறித்த ஸ்டிக்கர்களை ஒட்டினர்.