உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சுகந்தரு விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்

சுகந்தரு விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்

 பிரான்மலை : பிரான்மலை அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் உள்ள பழமையான சுகந்தரு விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. பிரசன்னகுமார் சிவாச்சாரியார் பூஜைகளை நடத்தி வைத்தார். தொடர்ந்து நேற்று காலை 10:30 மணிக்கு கோயில் விமான கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. நிகழ்ச்சியில் சிங்கம் புணரி தாசில்தார் திருநாவுக்கரசு, வட்டார மருத்துவ அலுவலர் நபிஷா பானு, தி.மு.க., ஒன்றிய செயலாளர் பூமிநாதன் மற்றும் மருத்துவ அலுவலர்கள் சமூக இடைவெளியுடன் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !