உத்தரகோசமங்கை, திருப்புல்லாணி கோயிலில் முன்னேற்பாடு ஏற்பாடுகள் தீவிரம்
உத்தரகோசமங்கை: கொரோனா ஊரடங்கு காரணமாக 80 நாட்களுக்கு பிறகு, உத்தரகோசமங்கை மங்களநாத சுவாமி சமேத மங்களேஸ்வரி அம்மன் கோயில் பக்தர்கள், சிவனடியார்கள் மூலம் உழவாரப்பணி நடந்தது. கோயில் வெளிப் பிரகாரம், உள்பிரகாரம் ஆகியவற்றை சுத்தம் செய்தனர். சன்னதி பிரகார மண்டபங்களில் தண்ணீர் மூலம் சுத்தம் செய்யப்பட்டது.
சமூக இடைவெளியை கடைபிடிக்கும் விதமாக அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளது. திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் சமேத பத்மாஸனி தாயார் கோயிலில் உள்ள பிரகாரங்களில் தூய்மைப்படுத்தும் பணியை தன்னார்வலர்கள் மூலம் செய்யப்பட்டது. கோயிலுக்கு தரிசனம் செய்வதற்காக வரக்கூடிய பக்தர்களுக்கு கிருமிநாசினி, தொட்டிகளில் மஞ்சள் நீர் வேப்பிலை கலந்து வைக்கப்பட உள்ளது. முகக்கவசம் அணிந்த பக்தர்கள் மட்டுமே தரிசனம் செய்ய அனுமதிக்கப் படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீண்ட நாட்களுக்குப் பிறகு கோயில் திறக்க உள்ளதால் பக்தர்கள் தரிசனத்திற்கு மகிழ்ச்சியுடன் தயாராகி வருகின்றனர்.