உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கொளஞ்சியப்பர் கோயிலில் கிருத்திகை சிறப்பு வழிபாடு

கொளஞ்சியப்பர் கோயிலில் கிருத்திகை சிறப்பு வழிபாடு

விருத்தாசலம் : விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோயிலில் கிருத்திகையை முன்னிட்டு மூலவர் சாமிகள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோயிலில் ஆனி கிருத்திகை விழா சிறப்பாக நடைபெற்றது. கொரோனா பரவலை தடுக்க மே 10 முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. நேற்று முதல் ஊரடங்கு தளர்வு அளிக்கப்பட்டது. கோயில்கள் திறக்கப்பட்டு பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். இன்று ஆனி கிருத்திகையை முன்னிட்டு, முருகபெருமானுக்கு சிறப்பு அலங்காரமும், தீபாராதனைகளும் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் சுவாமி அருள்பாலித்தார். உடல் வெப்பநிலை பரிசோதனைக்கு பின் முகக்கவசம் அணிந்த பக்தர்களை மட்டுமே கோயிலுக்குள் அனுமதித்தனர். கொரோனா விதிகளை கடைபிடித்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !