கோவில்கள் திறப்பு சமூக இடைவெளியுடன் தரிசனம்
ADDED :1599 days ago
விழுப்புரம்: விழுப்புரத்தில் ஊரடங்கால் மூடிய கோவில்கள் திறக்கப்பட்டு பக்தர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி சுவாமி தரிசனம் செய்தனர்.கொரோனா ஊரடங்கால், அனைத்து வழிபாட்டுத் தலங்களும் மூடப்பட்டன. தற்போது நோய் தொற்று குறைந்து வருவதை யொட்டி ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டு கோவில்களைத் திறக்க அரசு அனுமதி அளித்து உத்தரவிட்டது.அதனையொட்டி, நேற்று விழுப்புரத்தில் உள்ள கைலாசநாதர், வைகுண்டவாச பெருமாள் உட்பட பிரசித்தி பெற்ற கோவில்கள் அனைத்தும் திறக்கப்பட்டு பக்தர்கள் முன்னிலையில் பூஜை நடந்தது. பக்தர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி சுவாமி தரிசனம் செய்தனர்.