திண்டிவனம் திந்திரிணீஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு
ADDED :1754 days ago
திண்டிவனம்: திந்திரிணீஸ்வரர் கோவிலில் நேற்று பிரதோஷ வழிபாடு நடந்தது.
திண்டிவனம் திந்திரிணீஸ்வரர் கோவிலில் நேற்று பிரதோஷ வழிபாடு நடந்தது. அதையொட்டி, மூலவர் மற்றும் நந்தி பகவானுக்கு பால், தயிர், இளநீர், உள்ளிட்ட பல்வேறு பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து திந்திரிணீஸ்வரர் சமேதராக நந்தி வாகனத்தில் எழுந்தருளி கோயிலை உட்பிரகாரத்தில் வலம் வந்த சுவாமியை,முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் மற்றும் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.