தேவிபட்டினத்திற்கு பக்தர்கள் வருகை
ADDED :1599 days ago
தேவிபட்டினம் : கொரோனா இரண்டாம் அலை தாக்கத்தால், வழிபாட்டு தலங்கள் அனைத்தும் சில மாதங்களாக மூடப்பட்டிருந்த நிலையில், ஜூலை 5 முதல் வழிபாட்டு தலங்கள் அனைத்தும் திறக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் தேவிபட்டினம் நவபாஷானத்திற்கு முன்னோர்களுக்கு தர்பணம், திருமண தடை, குழந்தை பாக்கியம் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு பரிகார பூஜை செய்வதற்காக பக்தர்கள் தற்போது வருகின்றனர்.பக்தர்கள் தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில், கடலுக்குள் நவகிரகங்களை சுற்றி வந்து வழிபட தடை விதிக்கப்பட்டுள்ளது.பக்தர்கள் கடலில் புனித நீராடி, பரிகார பூஜை செய்து நவகிரக நடை மேடை வழியாக சுற்றி வந்து நவகிரக வழிபாடு செய்து வருகின்றனர்.