உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / 4 மாதமாக வழங்காத ஓய்வூதியம்; கோயில் பூஜாரிகள் எதிர்பார்ப்பு

4 மாதமாக வழங்காத ஓய்வூதியம்; கோயில் பூஜாரிகள் எதிர்பார்ப்பு

 சிவகங்கை, : நான்கு மாதமாக வழங்கப்படாத பூஜாரிகள் ஓய்வூதியத்தை உடனடியாக வழங்க வேண்டும்,என கிராம கோயில் பூஜாரிகள் பேரவையினர் தெரிவித்துள்ளனர்.கொரோனா தொற்று காரணமாக பொருளாதார ரீதியாக பூஜாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு உடனடியாகஅனைத்து பூஜாரிகளுக்கும் உதவித்தொகை வழங்க வேண்டும்.நான்கு மாதங்களாக வழங்கப்படாமல் உள்ள பூஜாரிகள் ஓய்வூதியத்தை உடனடியாக வழங்க வேண்டும்.பூஜாரிகள் நல வாரியத்தை செயல்படுத்த வேண்டும். கோயில் அறங்காவலர் குழுவில் அர்ச்சகர், பட்டாச்சாரியார்,கிராமக்கோயில் பூஜாரிகளையும் இணைக்க வேண்டும். கிராமகோயில் பூஜாரிகளுக்கு மாத ஊக்கத்தொகை வழங்க வேண்டும்,என தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.இதனை வலியுறுத்தி விஸ்வ ஹிந்து பரிஷத் மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியம்,பூஜாரிகள் பேரவை மாவட்ட அமைப்பாளர் சண்முகசுந்தரம்,நகர தலைவர் ஆறுமுகம், நிர்வாகி சசிக்குமார் ஆகியோர் கலெக்டர்மதுசூதன்ரெட்டியிடம் மனு கொடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !