தங்க கவசத்தில் அருள்பாலித்த வீரக்குமார் சுவாமி
ADDED :1654 days ago
வெள்ளகோவில்: வெள்ளகோவில் வீரக்குமார் சுவாமி திருக்கோவிலில் நேற்று ஆனி அமாவாசையை முன்னிட்டு சந்தன காப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சுவாமிக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
ஓலப்பாளையம், முருக்கங்காட்டுவலசு தம்பிக்கலையசாமி கோவிலில் 16 திரவியங்கள் அடங்கிய சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்டு அமாவாசை சிறப்பு பூஜை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. வீரசோழபுரம் அடஞ்சாரம்மன் கோவில், ஏரி மொண்டிக் கருப்பணசாமி கோவில், கருப்பண்ணசாமி கோவில், ஆனைமேல் அழகி அம்மன் கோவில், நாட்ராயன் கோவில், உட்பட அனைத்து கோவில்களிலும் நேற்று சிறப்பு அமாவாசை பூஜை நடந்தது. பக்தர்கள் சமூக இடைவெளியுடன் முக கவசம் அணிந்து சாமி தரிசனம் செய்து பிரசாதம் பெற்றுச் சென்றனர்.