ராமேஸ்வரத்தில் மூடி கிடக்கும் தீர்த்தம்: பக்தர்கள் வேதனை
ADDED :1592 days ago
ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்குள் 2 மாதமாக மூடி கிடக்கும் தீர்த்தங்களை திறக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் தெரிவித்தனர்.
ஊரடங்கு தளர்வால் தமிழகத்தில் ஜூலை 5 முதல் கோயில்கள், சுற்றுலா தலங்கள் திறக்கப்பட்டு சுற்றுலா பயணிகள், பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். ஆனால் தீர்த்த தலமான ராமேஸ்வரம் கோயிலுக்குள் உள்ள 22 தீர்த்தங்கள் திறக்காமல் மூடியே கிடக்கிறது. தற்போது அக்னி தீர்த்த கடலில் நீராடும் பக்தர்கள், கோயிலுக்குள் புனித நீராட முடியாமல் திரும்பி செல்கின்றனர். அரசு வழிகாட்டும் நெறிமுறை வகுத்து தீர்த்தத்தை திறக்க துரித நடவடிக்கை எடுக்காவிடில் போராட்டம் நடத்துவோம் என இந்து முன்னணி மாவட்ட பொதுச்செயலர் ராமமூர்த்தி தெரிவித்தார்.