பூச நட்சத்திர வழிபாடு
ADDED :1658 days ago
தலைவாசல்: பூச நட்சத்திரத்தையொட்டி, தலைவாசல், வடகுமரை, சத்திய ஞான சபையில், சிறப்பு வழிபாடு நேற்று நடந்தது. சபை வளாகத்தில் கொடியேற்றி, திருவருட்பா, அகவல் பாராயணம் உள்ளிட்டவை பாடப்பட்டன. பின், திரைகள் விலக்கப்பட்டு, ஜோதி தரிசனம் காட்டப்பட்டது. முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றி பக்தர்கள் தரிசனம் செய்தனர். அதேபோல், ஆத்தூர் சமரச சுத்த சன்மார்க்க ஞானசபையில், ஜோதி தரிசனம் நடந்தது.