மாரந்தையில் வருடாபிஷேக விழா
ADDED :1590 days ago
கடலாடி: கடலாடி அருகே மாரந்தை கிராமத்தில் செந்தூர் மருதுபாண்டிய ஆத்ம லிங்கேஸ்வரர் கோயில் மூன்றாம் ஆண்டு வருடாபிஷேக விழா நடந்தது. மக நட்சத்திரத்தை முன்னிட்டு நேற்று மூலவர், விநாயகர், நந்திகேஸ்வரர், நாகநாதர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு 16 வகையான அபிஷேக ஆராதனைகள் நிறைவேற்றப்பட்டது. மகா ருத்திர ஹோமம் நடந்தது. ஏற்பாடுகளை காளீஸ்வரன், சத்தியமூர்த்தி ஆகியோர் செய்திருந்தனர்.