இந்தாண்டும் வடமதுரை பெருமாள் கோயிலில் பக்தர்களின்றி ஆடித்திருவிழா
ADDED :1588 days ago
வடமதுரை: வடமதுரை சவுந்தரராஜப் பெருமாள் கோயிலில் 2வது ஆண்டாக பக்தர்களின்றி ஆடித்திருவிழா நடத்தப்படுகிறது.
இங்கு ஆண்டுதோறும் ஆடி மாத பவுர்ணமியையொட்டி 13 நாள் திருவிழா நடக்கிறது. இந்தாண்டுக்கான திருவிழா ஜூலை 16ல் கொடியேற்றத்துடன் துவங்கி ஜூலை 28 வரை நடக்கிறது.கொரோனா தொற்று பரவலால் இந்தாண்டும் பக்தர்களின்றி, ஊழியர்கள் மட்டுமே பங்கேற்கும் வகையில் கோயில் வளாகத்திற்குள் திருவிழா நடக்கும். சப்பரத்தில் சுவாமி வளாகத்தை வலம் வருவதுடன் 13 நாள் திருவிழாவும் எளிமையாக நடக்கும்.செயல் அலுவலர் மாலதி கூறுகையில், அரசு வழிகாட்டுதல்படி திருவிழா நடத்த திட்டமிட்டுள்ளோம். தொற்று பரவல் பிரச்னையால் பக்தர்களுக்கு இந்தாண்டும் அனுமதியில்லை மற்ற நாட்களில் பக்தர்கள் வழக்கமான தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர், என்றார்.