அவிநாசியில் மாணிக்கவாசகர் குரு பூஜை விழா
ADDED :1588 days ago
அவிநாசி: அவிநாசியில், ஸ்ரீ மாணிக்கவாசகர் குருபூஜை விழா நேற்று நடந்தது.சைவ சமய குரவர்களில் ஒருவரான ஸ்ரீ மாணிக்கவாசகருக்கு, அவிநாசி மேற்கு ரத வீதியில், கோவில் உள்ளது. நேற்று, குரு பூஜை நடந்தது.சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடத்தப்பட்டு, மூலஸ்தானத்திலுள்ள மாணிக்கவாசகருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. உலக அமைதிக்காக சிறப்பு பிரார்த்தனையும் நடந்தது.ஏராளமான பக்தர்கள், சமூக இடைவெளியுடன் பங்கேற்றனர். பொதுவாக, திருவீதி உலா நடத்தப்படுவது வழக்கம். இந்தாண்டு, கொரோனா ஊரடங்கால், திருவீதி உலா நடத்தப்படவில்லை. எளிமையாக விழா நடந்தது.