பூசாரிகள் பேரமைப்பு கோரிக்கை
ADDED :1587 days ago
கோவை,: பூசாரிகளுக்கு உதவித்தொகை வழங்க வேண்டும் என்று, தமிழ்நாடு பூசாரிகள் பேரமைப்பு வலியுறுத்தியுள்ளது.பேரமைப்பின் மாவட்ட தலைவர் ஜெகன்நாதன் கூறுகையில், அரசின் ஒரு கால பூஜை திட்டத்தில், பயனடையாத பூசாரிகள் பலர், கொரோனா நிவாரண நிதியை பெற முடியாத நிலையில் உள்ளனர். அனைவருக்கும் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். பூசாரிகளுக்கு மாதந்தோறும் உதவித்தொகையாக, ஐந்தாயிரம் ரூபாய் வழங்க வேண்டும், என கூறியுள்ளார்.