வளர்பிறை சஷ்டி; திருச்செந்துாரில் பக்தர்கள் குவிந்தனர்
திருச்செந்துார்: திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமியிலில்,வளர்பிறை சஷ்டியை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். ஊரடங்கில் அரசு அளித்த தளர்வின் காரணமாக, திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமியில், கடந்த 5ம் தேதி முதல் திறக்கப்பட்டு, பக்தர்கள் முககவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி, சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வந்தனர். ஆனால், கடலில் புனித நீராட அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், வளர்பிறை சஷ்டி என்பதால், முருகப் பெருமானை தரிசிக்க தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலில் குவிந்தனர். இவர்கள் சமூக இடை வெளியை பின்பற்றாமல் , கூட்டம் கூட்டமாகச் சென்று கோயிலில் சுவாமி தரிசனம் செய்தனர். இதனால் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக, சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்தனர்.