முத்துமாரியம்மன் கோயிலில் வருஷாபிஷேக விழா
ADDED :1556 days ago
காரைக்குடி: காரைக்குடி அருகே உள்ள பாதரக்குடி முத்துமாரியம்மன் கோயிலில் வருஷாபிஷேக விழா நேற்று நடந்தது. வருஷாபிஷேக விழாவை முன்னிட்டு கணபதிஹோமம், கும்பபூஜை நடந்தது. தொடர்ந்து, கும்பம் எழுந்தருளல், விமான அபிஷேகமும் நடந்தது. பின்னர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனைகள் நடந்தது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.