திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் குவிந்த பக்தர்கள்
ADDED :1877 days ago
திருவண்ணாமலை : தமிழக அரசு கடந்த 5ம் தேதி முதல் வழிபாட்டு தலங்கள் திறக்கவும், பக்தர்கள் தரிசனம் செய்யவும் அனுமதி அளித்தது. இதையடுத்து, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் இரண்டாம் பிரகாரத்தில், இரண்டு மாதத்திற்கு பிறகு நீண்ட வரிசையில் காத்திருந்து, விடுமுறை நாட்களான நேற்று ஞாயிற்றுக்கிழமை, பக்தர்கள் தரிசனம் செய்தனர். சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.