உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நாகமுத்து மாரியம்மன் கோவிலில் கூழ் வார்த்தல் பூஜை

நாகமுத்து மாரியம்மன் கோவிலில் கூழ் வார்த்தல் பூஜை

 திண்டிவனம், திண்டிவனம் அடுத்த இலுப்பைதோப்பு நாகமுத்து மாரியம்மன் கோவிலில், ஆடி மாதத்தையொட்டி, கூழ்வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது.ஆடிமாதத்தையொட்டி  அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. அதனையொட்டி காலை சுவாமிக்கு அபிேஷக ஆராதனையும், தொடர்ந்து கூழ் வார்த்தல் நிகழ்ச்சியும் நடந்தது. சுவாமி வெள்ளிக் கவசத்தில் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !