திருப்பரங்குன்றம் கோயில்களில் ஆடி விழா: உள்திருவிழாக்களாக நடத்த முடிவு
ADDED :1549 days ago
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆடி மாதத்தில் ஆடி பரணி, ஆடி கார்த்திகை, ஆடிப்பூரம், சுந்தரர் குருபூஜை ஆகிய திருவிழாக்கள் கொரோனா தடை உத்தரவால் கோயிலுக்குள் உள் திருவிழாக்களாக நடத்த நிர்வாகம் முடிவு செய்துள்ளது. பௌர்ணமி கிரிவலம், 1008 விளக்கு பூஜைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. என கோயில் துணை கமிஷனர் (பொறுப்பு) ராமசாமி தெரிவித்தார்.
திருநகர் சித்தி விநாயகர் கோயில், பாண்டியன் நகர் கல்யாண விநாயகர் கோயில், எஸ்.ஆர்.வி. நகர் கல்கத்தா காளி அம்மன் கோயில். கல்குளம் ஸ்ரீ தர்ம சாஸ்தா ஐயப்பன் கோயில், ஹார்விபட்டி பாலமுருகன் கோயில்களிலம் ஆடி மாத திருவிழாக்கள் உள் திருவிழாக்களாக நடத்தப்படவுள்ளது.