திருப்புல்லாணியில் ஜீயர் மடம் சார்பில் அன்னதான கட்டடம் திறப்பு
ADDED :1610 days ago
திருப்புல்லாணி: திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் கோயில் அருகே திருக்குறுங்குடி ஜீயர் மடம் உள்ளது. திருக்குறுங்குடி மடத்தின் ஜீயர் சுவாமிகள் அன்னதான கட்டடத்தை திறந்து வைத்தார். மடத்தின் மேலாளர் ரகுபதி முன்னிலை வகித்தார். திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் கோயிலில் மங்களாசாசனம் நடந்தது. கோயில் செயல் அலுவலர் ராமு, பேஸ்கார் கண்ணன் உட்பட பலர் பங்கேற்றனர். திருப்புல்லாணி, சேதுக்கரைக்கு வருகை தரும் பக்தர்கள், யாத்திரிகர்களுக்கு அமாவாசை தோறும் ஜீயர் மடம் சார்பில் அன்னதானம் நடந்து வருகிறது.