சிறப்பு அலங்காரத்தில் பெரியகுளம் கவுமாரியம்மன்
ADDED :1599 days ago
பெரியகுளம் : பெரியகுளத்தில் பிரசித்திப்பெற்ற கவுமாரியம்மன் கோயில் ஆனித்திருவிழா கொரோனாவால் இரு ஆண்டாக நடக்கவில்லை. ஆண்டுதோறும் ஆடி மாதம் முதல் செவ்வாய்க்கிழமை அதன் மறுபூஜை நடத்தப்படும். இதனை நினைவு கூறும் வகையில் கோயிலுக்கு பக்தர்கள் நேற்று காலை முதல் பால்குடம் எடுத்து வந்தனர். மாவிளக்கு எடுத்து சமூக இடைவெளியுடன், அலங்காரத்தில் இருந்த அம்மனை தரிசித்தனர்.