உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காரமடை அரங்கநாதர் கோவிலில் ஆடி மாத சுக்ல ஏகாதசி வழிபாடு

காரமடை அரங்கநாதர் கோவிலில் ஆடி மாத சுக்ல ஏகாதசி வழிபாடு

மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில், ஆடி மாத சுக்ல பக்ஷ ஏகாதசி முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது.

காரமடை அரங்கநாதர் கோவிலில் காலை, 5:30 மணிக்கு நடை திறக்கப்பட்டு, மூலவருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. காலசந்தி பூஜையில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக அரங்கநாத பெருமாளுக்கு, ஸ்தபன திருமஞ்சனம் நடந்தது. பின்பு உற்சவர் அரங்கநாதர் சுவாமி மட்டும், திருக்கோயிலை வலம் வந்து, ஆஸ்தானம் அடைந்தார். பின்பு உச்சக்கால பூஜை, சாற்றுமுறை நடந்தது. இதில் கோவில் ஸ்தலத்தார்கள், அர்ச்சகர்கள், மிராசுதாரர்கள், கோவில் ஊழியர்கள் ஆகியோர் பங்கேற்றனர். இந்த உற்சவ நிகழ்ச்சியில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !