உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆடி வெள்ளி: ராஜகாளியம்மன் கோயிலில் பக்தர்கள் நேர்த்திக்கடன்

ஆடி வெள்ளி: ராஜகாளியம்மன் கோயிலில் பக்தர்கள் நேர்த்திக்கடன்

திருப்புத்துார்: திருப்புத்துார் மேற்கு எல்லைத் தெய்வமான ராஜகாளியம்மன் கோயிலில் ஆடி  முதல் வெள்ளியை முன்னிட்டு பக்தர்கள் நேர்த்திக் கடன்களை நிறைவேற்றி அம்மனை வழிபட்டனர்.

இக்கோயிலில் ஆடி மாதத்தில் அனைத்து வெள்ளிக்கிழமைகளிலும் சிறப்பு வழிபாடு நடைபெறும். கடைசி வெள்ளி விமர்சையாக நடைபெறும். இன்று முதல் வெள்ளியை முன்னிட்டு காலை மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிேஷக,ஆராதனைகள் நடந்து சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். காலை முதல் பக்தர்கள் திரளாக வந்து அம்மனை தரிசித்தனர். பெண்கள் நெய் விளக்கேற்றி அம்மனை பிரார்த்தித்தனர். பக்தர்கள் குழந்தைகளுக்கு முடி இறக்கியும், பொங்கல் வைத்தும் நேர்த்திக் கடன்களை நிறைவேற்றினர். பூமாயி அம்மன் கோயிலிலும் பக்தர்கள் அம்மனை திரளாக முகக்கவசம் அணிந்து தரிசித்தனர். வெள்ளி அங்கியில் சந்தனக் காப்பு அலங்காரத்தில் அம்மன்  பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !