சேந்தநத்தம் முத்து மாரியம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்
ADDED :1623 days ago
வில்லியனுார்-சேந்தநத்தம் முத்து மாரியம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் நடந்தது.வில்லியனுார் அடுத்த சேந்தநத்தம் கிராமத்தில் முத்து மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில், செடல் உற்சவம் கடந்த 17ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.விழா நாட்களில், காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. முக்கிய விழாவாக காளியம்மன், ஐயனாரப்பனுக்கு ஊரணி பொங்கல் இடுதல், மாரியம்மனுக்கு செடல் விழா நடந்தது.தொடர்ந்து மஞ்சள் நீராட்டு விழா, ஊஞ்சல் உற்சவம் நடந்தது.