உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அம்மனுக்கு மஞ்சள் அரைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

அம்மனுக்கு மஞ்சள் அரைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

காரைக்குடி: காரைக்குடியில் உள்ள அம்மன் கோயில்களில் ஆடி வெள்ளியான இன்று ஏராளமான பக்தர்கள் மஞ்சள் அரைத்துக் கொடுத்தும், கூழ் ஊற்றியும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில், கணேசபுரம் மாரியம்மன் கோயில், கொல்லங்காளியம்மன் கோயில், முத்தாலம்மன் கோயில் உள்ளிட்ட பல்வேறு அம்மன் கோயில்களில் ஆண்டுதோறும் ஆடிமாதங்களில், செவ்வாய் மற்றும் வெள்ளியிலும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வார்கள். முதல் ஆடி வெள்ளியான இன்று மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயிலில் மதியம் 12.30 மணிக்கு சிறப்பு மஞ்சள் அபிஷேகம் நடந்தது. கணேசபுரம் மாரியம்மன் கோயிலில், வைக்கப்பட்டிருந்த அம்மியில் மஞ்சள் அரைத்து பக்தர்கள் வழங்கினர். கோயில்கள் பக்தர்கள் கூழ் ஊற்றி நேர்த்திக் கடன் செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !