உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வடமதுரை ஆடித் திருவிழா: பல்லக்கில் உலா வந்த பெருமாள்

வடமதுரை ஆடித் திருவிழா: பல்லக்கில் உலா வந்த பெருமாள்

வடமதுரை: வடமதுரை ஆடித்திருவிழாவில் கொரோனா பிரச்னை காரணமாக தேருக்கு பதிலாக கேடயத்தில் சவுந்தரராஜப் பெருமாள் உலா வந்தார்.

இங்கு ஆண்டுதோறும் ஆடி பவுர்ணமியை முன்னிட்டு 13 நாட்கள் திருவிழா நடக்கும். சிறப்பு அம்சமாக 9வது நாளில் பெருமாள் தேரில் அமர்ந்து நான்கு ரத வீதிகளில் வீதிகள் வழியே நகரை வலம் வருவார். கொரோனா பிரச்னையால் கடந்த ஆண்டை போல இந்தாண்டும் தேரோட்டம் ரத்து செய்யப்பட்டது. மற்ற நிகழ்வுகள் வழக்கம்போல கோவில் வளாகத்துக்குள் எளிமையான முறையில் நடக்கிறது. திருவிழா உற்ஸவ நேரம் தவிர மற்ற நேரங்களில் தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். தேரோட்ட நாளான நேற்று ஸ்ரீதேவி, பூமாதேவியுடன் முத்தங்கி சேவையில் கேடயத்தில் பெருமாள் கோயில் வளாகத்திற்குள் வலம் வந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !