உலக நன்மைக்காக சிறப்பு ஹோமம்
ADDED :1878 days ago
சோழவந்தான்: சோழவந்தான் அக்ரஹாரம் மலையாளம் கிருஷ்ணய்யர் வேத பாடசாலையில் வேதவியாசர் ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது.கொரோனா தொற்று ஒழிந்து உலக மக்கள் நன்மை பெற வரதராஜ் பண்டிட் தலைமையில் விஷ்ணு சகஸ்ரநாம சிறப்பு ஹோமம், வேதபாராயணம், கூட்டு பிரார்த்தனை நடந்தது. ஏற்பாடுகளை மலையாளம் கிருஷ்ணய்யர் அறக்கட்டளை பொது மேலாளர் பாலசுப்பிரமணியன் செய்திருந்தார்.