மேலும் செய்திகள்
ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ர சாயி கோயிலில் செப்பு தேரோட்டம்
1529 days ago
கொழுக்கட்டைகளை சூறைவிட்டு அய்யனாருக்கு வினோத வழிபாடு
1529 days ago
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், ஆடி மாதத்தை யொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலைக்கோவிலில் குவிந்தனர். திருத்தணி முருகன் கோவிலில், ஆடி மாதம் ஞாயிற்றுக்கிழமை மற்றும் விடுமுறை நாள் என்பதால், வழக்கத்திற்கு மாறாக பக்தர்கள் அதிகளவில் மலைக்கோவிலில் குவிந்தனர். வரும் 2ம் தேதி ஆடிக் கிருத்திகை விழா நடக்கிறது. முன்கூட்டியே பெரும்பாலான பக்தர்கள் காவடிகளுடன் கோவிலுக்கு வந்தும், மொட்டை அடித்தும் தங்களது நேர்த்தி கடனை செலுத்தி நிறைவேற்றினர். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மலைக்கோவிலில், பொது வழி மற்றும் கட்டண சிறப்பு தரிசனம் ஆகிய பகுதிகளில் நீண்ட வரிசையில் நின்று மூலவரை தரிசித்தனர்.
1529 days ago
1529 days ago