உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருக்கோஷ்டியூர் ஆடிப்பூர உற்ஸவம் ஆக.2ல் துவக்கம்

திருக்கோஷ்டியூர் ஆடிப்பூர உற்ஸவம் ஆக.2ல் துவக்கம்

திருக்கோஷ்டியூர்: திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோயிலில் பக்தர்கள் பங்கேற்காமல் ஆடிப்பூர உற்ஸவம் ஆக.2ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது.

சிவகங்கை சமஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் ஆடிப்பூர உற்ஸவம் பத்து நாட்கள் நடைபெறும். ஆண்டாள் பிறந்த நட்சத்திரமான ஆடிப்பூரத்தை முன்னிட்டு நடைபெறும் இந்த உற்ஸவத்தில் தினசரி இரவு பெருமாளும், ஆண்டாளும் திருவீதி வலம் வருதலும்,  10ம் திருநாளில் ஆடிப்பூரத்தன்று தேரோட்டமும் நடைபெறும். கொரோனா கட்டுப்பாடு விதிகளின்படி தற்போது பக்தர்களுக்கு அனுமதியில்லாமல் உற்ஸவம் நடைபெற உள்ளது. ஆக.,1 மாலையில் பூர்வாங்க பூஜைகள் நடைபெறும். மறுநாள்  காலையில் பெருமாள் கல்யாண மண்டபத்தில் எழுந்தருளி காலையில் கொடியேற்றத்துடன் உற்ஸவம் துவங்குகிறது. தினசரி மாலையில் பூஜைகள் நடந்த பின்னர் உட்பிரகாரத்தில் பெருமாள், ஆண்டாள் வலம் வருகின்றனர். தேரோட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !