உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கங்கைவராக நதீஸ்வரர் கோயிலில் ஆடிப்பூர பிரமோற்சவம் துவக்கம்

கங்கைவராக நதீஸ்வரர் கோயிலில் ஆடிப்பூர பிரமோற்சவம் துவக்கம்

 வில்லியனுார்: திருக்காஞ்சி கங்கைவராக நதீஸ்வரர் கோயிலில் ஆடிப்பூர பிரமோற்சவத்தையொட்டி, நேற்று பந்தக்கால் விழா நடந்தது.வில்லியனுார் அடுத்த திருக்காஞ்சி கிராமத்தில் காமாட்சி, மீனாட்சி உடனுறை கங்கைவராக நதீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது.இக்கோயிலில் ஆடிப்பூர பிரமோற்சவ விழா, வரும் 31ம் தேதி மாலை விக்னேஸ்வர பூஜையுடன் துவங்குகிறது. பந்தக்கால் விழா நேற்று நடந்தது. 12ம் தேதி வரை தொடர்ந்து விழா நடைபெறுகிறது. முக்கிய விழாக்களாக, 10ம் தேதி வளையல் அணி சேவை, 11ம் தேதி திருக்கல்யாணம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !