மீனாட்சி அம்மன் கோயில் கிளை சார்பில் உழவார பணி
ADDED :1590 days ago
மதுரை : ஹிந்து ஆலய பாதுகாப்பு இயக்கத்தின் மீனாட்சி அம்மன் கோயில் கிளை சார்பில் உழவார பணி நடந்தது. அமைப்பாளர் ஜெயச்சந்திரன் தலைமை வகித்தார். 45 உறுப்பினர்கள் கோயில் பிரகார துாண்களை சுத்தம் செய்தனர். அஷ்டசக்தி உள்ளிட்ட மண்டபங்களில் துாய்மை பணி மேற்கொள்ளப்பட்டது. மாநில செய்தி தொடர்பாளர் சுந்தரவடிவேல் உழவார பணியின் முக்கியத்துவம் குறித்து பேசினார்.