உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கள்ளக்குறிச்சி பத்ரகாளியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு

கள்ளக்குறிச்சி பத்ரகாளியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி பத்ரகாளியம்மன் கோவிலில் ஆடி வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.

கள்ளக்குறிச்சி பாரதி பள்ளி பின்புறம் உள்ள இக்கோவில் தோஷ நிவர்த்திக்கு பிரசித்தி பெற்றதாகும். பில்லி, சூனிய தடைகளை உடைத்தெறிந்து தோஷ நிவர்த்தி செய்து அருள்பாலிக்கும் சக்தி மிக்க இந்த பத்ரகாளியம்மன் கோவிலில் அமாவாசை நாட்களில் நிகும்பலா யாகம் நடத்தப்படுகிறது.மேலும், இங்குள்ள நாகாத்தம்மன், சக்தி அம்மன், காட்டேரி அம்மன் சுவாமிகளுக்கு சிறப்பு ஆராதனை நடத்தப்படுகின்றன. வெள்ளி, ஞாயிறுக் கிழமைகளில் மாலை நேரத்தில் சுவாமி அருள்வாக்கு தரும் வைபவம் நடக்கிறது.ஆடி மாத வெள்ளிக்கிழமை நாட்களில் சுவாமிக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை பக்தர்கள் பங்களிப்புடன் செய்யப்படுகிறது. வழிபாடுகளை கோவில் நிர்வாகி சிவக்குமார் செய்து வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !