உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சித்ரதுர்காவில் மழை வேண்டி கழுதைக்கு திருமணம்

சித்ரதுர்காவில் மழை வேண்டி கழுதைக்கு திருமணம்

சித்ரதுர்கா: மாநிலம் முழுவதும் பரவலாக பலத்த மழை பெய்தாலும் சித்ரதுர்காவின் சில பகுதிகளில் எதிர்பார்த்த மழை இல்லை . ஈச்சலநாகேனஹள்ளி கிராமத்திலும் துாறல் மழை மட்டுமே பெய்து வருகிறது. நல்ல மழை பெய்ய வேண்டி கிராமத்தினர், இரண்டு நாட்களுக்கு முன் கழுதைக்கு திருமணம் செய்து, கிராமம் முழுக்க ஊர்வலமாக அழைத்து சென்றனர். அப்போது துாறல் மழை பெய்தாலும் நனைந்தபடியே கழுதை ஊர்வலம் நடத்தினர். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !