நத்தம் மாரியம்மன் கோவிலில் ஆடி வெள்ளி பூஜை
ADDED :1528 days ago
நத்தம்: திண்டுக்கல் மாவட்டம் நத்தம் மாரியம்மன் கோவிலில் ஆடி மாத வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜை நடந்தது. மாரியம்மனுக்கு பலவித அபிஷேக, அலங்கா தீபாராதனைகள் நடந்தது. இதேபோல் உற்சவருக்கும் நடந்தது. சர்வ அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சுற்றுப்பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து தரிசனம் செய்தனர். கோவிலில் நாகருக்கு உள்ள சூலாயுதத்தில் பக்தர்கள் பால் ஊற்றி வழிபட்டனர். இதுபோலவே நத்தம் பகவதிம்மன், காளியம்மன் கோவில்களிலும் ஆடி வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜைகள் நடந்தது.