கைக்கு கைமாறும் பணமே!
ADDED :1802 days ago
மனிதனுக்கு பணத்தின் மீது பேராசை இருக்கிறது. எவ்வளவுதான் இருந்தாலும் இதை அடைய வேண்டும் என்று பலவிதங்களில் முயற்சி செய்கிறான். கைக்கு கைமாறும் பணமே உன்னைக் கைப்பற்ற நினைக்குது மனமே என்னும்படி சிலர் செயல்படுகிறார்கள். மனிதனுக்கு அளவுக்கு அதிகமாக பணம் கிடைத்தாலும் திருப்தி அடைவதில்லை. இன்னும் கிடைக்காதா என ஏங்குகிறான். பணத்தாசையால் கஞ்சத்தனம், குரூர சிந்தனை உண்டாகும். கேடு தரும் தீய வழிகளில் மனம் செல்லும்.